Thursday, January 23, 2025
HomeLatest Newsஇன்று கார்த்திகை அமாவாசை! சகல செல்வங்களையும்பெற இதனைச் செய்யுங்கள்

இன்று கார்த்திகை அமாவாசை! சகல செல்வங்களையும்பெற இதனைச் செய்யுங்கள்

இன்று கார்த்திகை அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் திதி கொடுத்தால் பித்ருதோஷம் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாளை காலை 4.50 மணிவரை இருக்கும் இந்த அமாவாசை நாட்களில் நாம் செய்யவேண்டியதைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இன்று ஆறு, குளங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் புண்ணியம் உண்டாகும், இதனால் பித்ருதோஷம் மற்றும் காலசர்ப்ப தோஷம் நீங்கி சுபிக்ஷம் ஏற்படும்.

கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதம் என்பதால், சிவலிங்கத்திற்கு நெய் விளக்கு, வில்வ இலை மற்றும் மரிக்கொழுந்து இவற்றினைக் கொண்டு அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இந்த அமாவாசை நாளில் ஆடை தானம் செய்தால், கெட்ட காலத்திலும் சனியின் பார்வை நமக்கு நன்மையைக் கொடுக்கும்.

மேலும் கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்த மாதம் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரத்தில் கூறப்படுகின்றது.

இந்த அமாவாசை நாளில், வீட்டின் வடகிழக்கு மூளையில் பசுநெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும் போது சிகப்பு நிற நூலை திரியாக வைத்து விளக்கு ஏற்றினால் செல்ல செழிப்பு ஏற்படும்.

சூர்ய அஸ்தமனத்தின் போதும் 5 நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செல்வ வளமும் பெருகும்.

மேலும் இந்த அமாவாசை தினத்தில் அரச மரத்திற்கு முன்பு தீபம் ஏற்றி 11 முறை சுற்றி வந்தால் நன்மை ஏற்படும்.எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த மாவினை உணவாக வைத்தால், லட்சுமி கடாட்சம் பெருகும்
என்பது ஐதீகம்.

Recent News