Friday, May 3, 2024
HomeLatest Newsமனித குலத்திற்கு ஏற்படப்போகும் பாரிய ஆபத்து- வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பாரிய ஆபத்து- வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை உலக அளவில்  கடுமையான சரிவு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பெல்ஜியத்தில் இயங்கி வரும் ஹூயுமன் ரீபுரொடெக்‌ஷன் அப்டேட் எனும் மருத்துவ இதழ், சமீபத்தில் 53 நாடுகளில் உள்ள 57,000 ஆண்களிடம் விந்தணு எண்ணிக்கை மற்றும் அதன் செறிவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வானது, இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் ஹடாசா பிரான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் ஹகாய் லெவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வில்,  டென்மார்க், பிரேசில், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். 

இந்த ஆய்வின் தொடக்கத்தில், தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள ஆண்களின் விந்தணுக்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த மதிப்பாய்வில் இந்தியா உள்பட பல நாடுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கையும், செறிவும் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டிருப்பது தெரியவந்தது.

தெளிவாக கூற வேண்டுமானால், கடந்த 50 ஆண்டுகளில் விந்தணுக்களின் எண்ணிக்கையானது 50 சதவீதம் குறைந்துள்ளது.

சதவீத கணக்கில் 1973 முதல் 2018ம் ஆண்டு வரை விந்தணுக்களின் எண்ணிக்கை சராசரியாக 1.2 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால், 2000- ஆம் ஆண்டுக்குப் பின் ஆண்டிற்கு 2.6 சதவீதத்திற்கும் அதிகமாக விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இந்த ஆய்வின் தலைவர் லெவின்  கூறுகையில்,

உலகம் முழுவதும் விந்தணு எண்ணிக்கை சரிவு பரவியிருப்பதாக தெரிவித்தார். இதற்கான காரணம் என்ன என்பது இந்த ஆய்வில் ஆராயப்படவில்லை.

அதேசமயம்,  மாறுபட்ட வாழ்க்கை முறை விந்தணுக்களின் எண்ணிக்கையில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலை நீடித்தால், மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Recent News