Wednesday, December 25, 2024
HomeLatest Newsதிடீரென உயிரிழந்த ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள்: காரணம் இதுதான்!

திடீரென உயிரிழந்த ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள்: காரணம் இதுதான்!

பெருவின் வடக்கு பகுதியில் பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

லிமாவில் உள்ள சாண்டா மரியா கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் பெலிகன்கள் மத்தியில், நடக்க முடியாமலும் நூற்றுக்கணக்கான பறவைகள் தவித்து வருகின்றன.

அதன்படி பசிபிக் பகுதியில் நவம்பர் மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெலிகன் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் தற்போது அதிகம் எனவும் கூறப்படுகிறது. 

Recent News