Tuesday, April 30, 2024
HomeLatest Newsகனடாவில் காரில் பிறந்த குழந்தை: என்ன நடந்தது தெரியுமா?

கனடாவில் காரில் பிறந்த குழந்தை: என்ன நடந்தது தெரியுமா?

கனடாவில் குழந்தையொன்று காரில் பிறந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது  வைரலாகி வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் கார் ஒன்றில் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

ட்ரசி கூப்பர் என்ற ஒன்பது மாத கர்ப்பிணி பெண் பிரசவ வலி எடுக்கவும் 911 என்ற அவசர சேவை பிரிவிற்கு அழைப்பினை எடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவை எவ்வளவு நேரத்தில் வரும் என கூற முடியாது என தொலைபேசியின் மறுமுனையிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ட்ரசி மற்றும் அவரது கணவர் இருவரும் சொந்த வாகனத்தில் நோவா ஸ்கோட்டியாவின் கெண்டில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை நோக்கி புறப்பட்டுச் சென்றனர் வாகனத்தில் செல்லும்போது பிரசவ வலி அதிகரித்த காரணத்தினால் வாகனம் அவசரமாக ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த வழியில் சென்ன்ற தன்னார்வ தொண்டர் ஒருவர் வாகனம் அவசரமாக நிறுத்தப்படுவதனை அவதானித்துள்ளார்.

உடன் விரைந்து செயற்பட்ட தன்னார்வ தொண்டர் குறித்த பெண்ணுக்கு பிரசவத்தின் போது உதவிகளை வழங்கியுள்ளார் தொலைபேசி வழியாக அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு இந்த பிரசவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கின்றார்.

அவசர சேவை பிரிவு உடன் இணைந்து இந்த பிரசவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனத்தில் முன் இருக்கையில் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கின்றனர்.

குழந்தை பிறந்து பத்து நிமிடங்களின் பின்னர் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு விரைந்து வந்ததாகவும் தாயும் சேயும் நலமாக இருந்தனர் எனவும் தன்னார்வ தொண்டர் தெரிவிக்கின்றார்.   

இந்த குழந்தைக்கு எமா என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News