Thursday, January 23, 2025
HomeLatest Newsஇந்த ராசிக்காரர்கள் மனைவியை படாத பாடு படுத்துவார்களாம்..!

இந்த ராசிக்காரர்கள் மனைவியை படாத பாடு படுத்துவார்களாம்..!

கணவன் மனைவி உறவு என்பது புனிதமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், வாழ்க்கை முழுவதும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, ஆதரவாகவும், அந்யோனியமாகவும் இருப்பதே கணவன் மனைவி உறவின் நோக்கம். அப்படி இருக்கையில், கணவன் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் சில குடும்பங்களையும் நாம் பார்த்திருப்போம். அப்படி, கட்டிய மனைவியை படாத பாடு படுத்தும் மோசமான கணவர்களின் ராசியை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்ப்போம் .

திருமண வாழ்க்கையில் ஆணுக்கு இருக்கும் அதே உரிமை பெண்ணுக்கும் உள்ளது. ஆனால், கணவன் செய்யும் அனைத்திற்கும் சகித்து கொண்டு செல்வதுதான் பெண் என கூறி வைத்துள்ளனர்.

ஒரு ஆரோக்கியமான உறவுக்கு தனிப்பட்ட நேரமும், அக்கறையும் முக்கியம். ஆனால, இங்கே பலருக்கு அது நல்லபடியாக அமைவதில்லை. திருமணத்திற்கு பிறகு கணவன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு குணமும் அவரின் ராசியை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. அந்தவகையில், திருமணம் செய்த மனைவியை படாத பாடுபடுத்தும் கணவன்மார்களின் ராசியை பற்றி பார்க்கலாம்.

​மேஷம்

செவ்வாய் ஆளும் நெருப்பு ராசியான மேஷம், இயல்பாகவே மற்றவரை அடக்கி ஆளும் மனநிலை உடையது. அத்துடன் இவர்களின் வேகம் மற்றவர்களை சில சமயங்களில் பாதுகாப்பின்மையாக உணர வைக்கலாம். மற்றும் இவர்கள் அனைவரிடமும் சற்று கரடுமுரடாக நடந்து கொள்வது மற்றவர்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும். திருமண உறவில் அதிகமாக இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், மனைவியை எல்லா விஷயங்களுக்கும் கட்டுப்படுத்துவார்கள். தனது கூட்டாளர் தனக்கு மட்டுமே சொந்தம், அவர் எனக்கு மட்டுமே சேவை செய்ய பிறந்தவர் என்ற மனநிலையில் இருப்பவர். தனக்கு பிடித்ததை மட்டுமே செய்வதில் ஆர்வம் உடையவர்.

தனது துணைக்கு இதில் விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை ஒருபோதும் யோசிக்கமாட்டார்கள். மற்றவர்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கை குறைவு. இதனால், இவர்கள் வேலையாட்களை மட்டும் அல்ல வீட்டில இருப்பவர்களையும் நம்ப மறுப்பார்கள். இவர்கள் தனது துணியை மனதளவில் மட்டும் அல்ல, உடலளவிலும் காயப்படுத்துவார்கள். ஆதிக்கம் இவர்களின் பிறப்பிலேயே இருப்பது அதை எவ்வளவு முயற்சித்தாலும் மாற்றுவது கடினம்.

​மிதுனம்

புதன் ஆளும் காற்று ராசியான மிதுனம், இரட்டை மனம் படைத்த ஆண்களாக இருப்பார்கள். எல்லா சூழலிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேசமாட்டார்கள். தங்களின் வருத்தத்தை தனக்குள்ளேயே வைப்பவர்கள். ஆனால், வாழ்க்கைத்துணை விஷயத்தில் கண்டிப்பானவர்கள். தனக்கானவர் மீது ஆதிக்கம் செலுத்துவதில் யோசிக்காதவர். ஏனென்றால், அவர்கள் அதை தவறான விஷயமாகவே கருதுவதில்லை.

மிதுன ராசி ஆண்கள் அவர்களின் துணை எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஆராய்கிறார்கள். முடிவை மட்டும் அல்ல அவர்களின் ஒவ்வொரு செயலையும் ட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். மனைவி விஷயத்தில் இவர்கள் ஒரு கண்டிப்பான கணவர் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

​கடகம்

சந்திரன் ஆளும் நீர் ராசியான கடகம், ஒரு பழைமை விரும்பி. பழமையாக விஷயங்களையும், பண்பாடுகளையும் விரும்புபவர். இவர்களுக்கு புதியவற்றைக் கண்டு அஞ்சும் குணம் இருப்பதால் புதிய சூழலை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கும். மேலும், உணர்திறன் மிக்கவர்கள். ஒரு சிறிய விஷயத்தை கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மென்மையான மனம் உடையவர்கள். ஆனால், தனக்கான பொருள் மீதி ஆதிக்க செலுத்துபவர்.

தனக்கான பொருள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற கோற்பாட்டை உடையவர். தனது மனைவியை தனது கையிக்குள் இருக்கமாக வைப்பதால், இவர்களுடன் செல்வதை வாழ்க்கைத்துணை வெறுப்பார். சிறந்த நோக்கங்களை இவர்கள் கொண்டிருந்தாலும், அவர்களின் ஆதிக்கம் உறவை சீர்குலைக்கும்.

​விருச்சிகம்

செவ்வாய் ஆளும் நீர் ராசியான விருச்சிகம், ஒரு மர்மமான மனிதர்கள் என்று கூறலாம். தங்கள் விஷயங்களை தங்களுக்குள்ளே வைத்துக் கொள்பவர்கள். தனிமையை அதிகமாக விரும்புபவர்கள். எனவே, இவர்களுக்கு திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தலாம். தனக்காக மட்டும் யோசிப்பவர்கள். கட்டிய மனைவியாக இருந்தாலும், அவர் 3-வது மனிதன் என நினைப்பவர். தன்னை மற்றவர் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் விரும்பாதவர்கள்.

இவர்களுக்கு கட்டுப்பாடுகள், விதிகளும் சுத்தமாக பிடிக்காது. தான் தான் பெரியவன், நான் சொல்லும் விஷயங்களை தான் நீங்கள் பின்பற்றவேண்டும் என்ற எண்ணமுடையவர். அவர்கள் அதிகாரம் மற்றும் சக்தியின் மீது வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன்னை பலமானவர்களாக காட்டிக்கொள்ள தங்கள் மனைவியின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்.

​மகரம்

சனி பகவான் ஆளும் பூமி ராசியான மகரம், அர்ப்பணிப்பு குணம் நிறைந்தவர்கள். தனக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்றால், அது அவர்களின் கைக்கு கிடைக்கும் வரை எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். பூமியை போல பொறுமையானவர்கள். இருப்பினும் சில விஷயங்களில் யோசிக்காமல் பேசுபவர்கள். மேஷத்தை விட மற்றவர் மீது அதிக ஆதிக்கம் செலுத்துபவர்கள் இவர்கள்.

அதேபோல, தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் மற்றவர் பாராட்ட வேண்டும் என நினைப்பவர். மற்றவர்களுக்கு உதவ யோசிப்பவர். ஏனென்றால், தான் இருக்கும் இடத்தில் அவனுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என நினைப்பவர். அதீத ஈகை குணம் உள்ளவர்கள். இதனால், அற்பமான விஷயங்களுக்கு கூட தங்கள் துணையை மோசமாக நடத்துவார்கள்.

Recent News