Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsசுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் - இந்தியா வெளியிட்ட கருத்தால் பரபரப்பு..!

சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் – இந்தியா வெளியிட்ட கருத்தால் பரபரப்பு..!

பாலஸ்தீனம் என்ற சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான தனி நாடு அமைவதே
இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்துக்கும் இடையே 7வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இஸ்ரேலில் 1300 பேரும், பாலஸ்தீனத்தில் 1400க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த போர் நடவடிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் ஒரு நிலைப்பாட்டையும், ஈராக், லெபனான், எகிப்து, சிரியா, ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன.


சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்நிலையில் இந்தியா தனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியது பிறகு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார். இதனால் இந்தியா இஸ்ரேலின் பக்கம் ஆதரவாக நிற்கும் என நிலைப்பாடு ஊகிக்கப்பட்டது.


ஆனால் இந்திய அரசு தனது வெளிப்படையான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அதில், பாலஸ்தீனம் என்ற சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான தனி நாடு அமைவதே
இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் நிலைப்பாடு பாலஸ்தீன விவகாரத்தில் மாறாது, பாதுகாப்பு மற்றும் அமைதி திரும்பிட இருநாடுகளும் சுதந்திரமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


பாலஸ்தீனம் என்ற தனி நாடு சுதந்திரமாக இயங்க வேண்டும், இரு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் சுதந்திரமாக பாதுகாப்பாக, அமைதியாக வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Recent News