Friday, May 10, 2024
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்த களமிறங்கிய அமெரிக்கா..!

இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்த களமிறங்கிய அமெரிக்கா..!

இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார்.


தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார்.

அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ்
ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து
தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News