ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் இணைந்து கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
2011 ஆம் ஆண்டளவில் யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை இணைப்பற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு யுனெஸ்கோவுக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்திவைத்தன.
அதையடுத்து, இஸ்ரேலுக்க்கு எதிரான போக்கை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டு யுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக 2017 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது.
அதனை தொடர்ந்து, யுனெஸ்கோவில் அமெரிக்காவின் இடத்தினை சீனா தன்வசமாக்கியது.
இவ்வாறான சூழலில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது.
அந்த விடயம் குறித்து தொடர்பாக முடிவெடுபதற்காக யுனெஸ்கோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தற்போது 193 நாடுகள் யுனெஸ்கோவில் உறுப்பினர்களாக உள்ளத்துடன் அந்த வாக்கெடுப்பில் 142 நாடுகள் மட்டுமே பங்குபற்றியுள்ளது.
அதில், 132 நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதுடன், 10 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக வாக்களித்துள்ளன.