Monday, April 29, 2024
HomeLatest Newsசிறுவர்கள் ஆபாசம் பார்ப்பதை தடுத்தல்..!தொழில்நுட்ப சட்டத்தை கடுமையாக்கிய பிரிட்டன்..!

சிறுவர்கள் ஆபாசம் பார்ப்பதை தடுத்தல்..!தொழில்நுட்ப சட்டத்தை கடுமையாக்கிய பிரிட்டன்..!

சிறுவர்கள் ஆபாசப் பதிவுகளைப் பார்வையிடுவதை தடுப்பதற்காக தொழில்நுட்பச் சட்ட மசோதாவினை பிரிட்டன் கடுமையாகியுள்ளது.

இந்நிலையில், இணையப் பாதுகாப்புச் சட்ட மசோதாவினை கடுமையாக்கி உள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.

இதன் மூலம், ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் சிறுவர்கள் பார்வையிடுவதை தடுப்பதற்கு வழி சமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில்நுட்பத் துறை நீண்ட காலமாக அணுக்கமாகக் கவனம் செலுத்தி வரும் அந்தச் சட்ட மசோதாவில் திருத்தம் குறித்த தொடர்பாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆபாசக் காணொளிகளையும், படங்களையும் வெளியிடும் தளங்களில் பயனாளரின் வயதைச் சரிபார்க்கும் முறைக்கு உயர் தரநிலை உருவாக்கப்படும் என்றும் அதன் மூலமாக பயனாளர் சிறுவரா என்பதை இணையத்தளங்கள் திறம்பட உறுதி செய்து கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏனைய நாடுகளையும் போன்று பிரிட்டனும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு சமூக ஊடகப் பயனர்களையும் அதிலும் சிறப்பாக சிறுவர்களை தீய பதிவுகளில் இருந்து பாதுகாப்பதற்காக போராடி வருகின்றது.

அந்த வகையில் புதிய சட்டத்தின் மூலம், தமது தளத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களைத் தீய பதிவுகளில் இருந்து பாதுகாப்பது அந்தத் தளத்தின் உயர்நிர்வாக அதிகாரிகளின் தனிப்பட்ட பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.

மாறாக அவர்கள் அந்த பொறுப்பினை செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இணையப் பாதுகாப்பு தொடர்பான குறித்த மசோதா வரும் சில மாதங்களில் சட்ட அங்கீகாரம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News