Thursday, January 23, 2025

நியூசிலாந்து மற்றும் சீனா இடையே மீண்டும் பறந்த விமானம்…!

நியூசிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே மீண்டும் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகள், கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தால் விமான சேவைகளை வெகுவாக குறைத்துக் கொண்டன.

இந்நிலையில், தற்சமயம் கொரோனா பாதிப்புகள் குறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளமையால் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷென்சென் விமான நிலையத்திற்கு இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த விமான சேவை தற்பொழுது ஹைனன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos