Tuesday, May 14, 2024
HomeLatest NewsIndia Newsமோடியின் அமெரிக்க வருகை ரஷ்யா மற்றும் சீனா தொடர்பானதன்று...!வெள்ளை மாளிகை கருத்து...!

மோடியின் அமெரிக்க வருகை ரஷ்யா மற்றும் சீனா தொடர்பானதன்று…!வெள்ளை மாளிகை கருத்து…!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் ரஷ்யா அல்லது சீனா குறித்து பேச்சுக்கள் இடம்பெற மாட்டாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்திலும் பங்கேற்கவுள்ளார்.

அதன் பின்னர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் பயணம் குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, மோடியின் அமெரிக்க வருகை ரஷ்யா அல்லது சீனா குறித்த பேச்சுவார்த்தை தொடர்பானது அல்ல என தெரிவித்துள்ளார்.

அவரது வருகை சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ- பசிபிக் பகுதிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதுடன் இருநாட்டின் உறவை மேம்படுத்துவதற்கான சந்திப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் பிரதமர் மோடியையோ அல்லது இந்திய அரசையோ வேறு ஏதாவது செய்ய வற்புறுத்துவது அல்ல என்றும் வெள்ளை மாளிகையில் இது ஒரு பெரிய வாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் தமது மூலோபாய கூட்டாண்மையை உயர்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்ப்பை மேம்படுத்த விரும்புவதாகவும் இந்தியா மபெரும் சக்தியாக உருவெடுக்க தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News