Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsநிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - நிலவிலும் நிலத்திற்கு போட்டி..!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – நிலவிலும் நிலத்திற்கு போட்டி..!

சீனா உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறுகையில், சீனா உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதற்காக வெனிசுலா நாட்டில் இருந்து இளைஞர்கள் பலர் சீனாவில் பயிற்சி பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.


இந்த சந்திப்பின்போது உணவு ஏற்றுமதி, தகவல் தொடர்பு, சுற்றுலா உள்பட
பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News