Wednesday, May 1, 2024
HomeLatest News1.2 லட்சத்திற்கு லேப்டாப் ஆர்டர் செய்த நபர்! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி

1.2 லட்சத்திற்கு லேப்டாப் ஆர்டர் செய்த நபர்! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் 1.2 லட்சத்திற்கு லேப்டாக் ஆர்டர் செய்த நிலையில், வந்திருந்த பார்சலில் பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.

இப்போதெல்லாம் மனிதர்கள் தங்களது வேலைகளை இலகுவாக்குவதற்கு பல வழிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். அதிலும் மக்கள் மிகவும் விரும்பி செய்வது இந்த ஒன்லைனில் ஷொப்பிங் தான்.

சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்கள் சரியான முறையில் வீடு வந்து சேரும்.. ஆனால் சில சமயத்தில் சற்று சொதப்பலில் போய் முடிந்துவிடுகின்றது.

1.2 லட்சம் மதிப்புள்ள லெப்டாப் ஒர்டர் செய்த நபருக்கு நாய் உணவு பார்சலை அனுப்பியுள்ள சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த நபரொருவர் தனது மகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி 1.2 இலட்சம் ரூபா மதிப்புள்ள MacBook Pro ஒன்றை பிரபல ஒன்லைன் ஷொப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் ஓர்டர் செய்துள்ளார்.

அடுத்த நாள் அந்த பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. ஓர்டரை திறந்து பார்த்த போது அந்த பார்சலில் இரண்டு Pedigree நாய் உணவு இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் ஆர்டர் மாறி வந்திருக்கலாம் என எண்ணி அமேசான் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

இது தங்களுடைய ஒர்டர் இல்லை எனக்கு என்னுடைய பணம் வேண்டும் என கூறியிருக்கிறார். முதலில் அவருக்கு பணத்தை திருப்பி தர மறுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பிறகு தனது தவறை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பித் தர உறுதியளித்தனர்.

குறித்த நபர் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும் பல்வேறு துறைகளுக்கு தொலைப்பேசி மாற்றப்பட்டுள்ளது. “ஆனால் ஒவ்வொரு உரையாடலும் ஒரே மாதிரியாக முடிந்தது, . நான் அவர்களிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் செலவழித்தேன், மேலாளர்களுடன் பேசினேன், மேலும் வெவ்வேறு துறைகளுக்கு மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டேன்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அமேசான் செய்தித் தொடர்பாளர் தன்னிடம் மன்னிப்பு கேட்டார். நாங்கள் இப்போது வாடிக்கையாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மன்னிப்புக் கேட்டு, சிக்கலைத் தீர்த்துள்ளோம் என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Recent News