Thursday, January 2, 2025
HomeLatest News‘மொட்டு’க்கான மக்கள் ஆணை முடிந்துவிட்டது; புதிய அரசை நிறுவத் தயார்! சஜித் அறிவிப்பு

‘மொட்டு’க்கான மக்கள் ஆணை முடிந்துவிட்டது; புதிய அரசை நிறுவத் தயார்! சஜித் அறிவிப்பு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட ‘மொட்டு’ அரசின் மக்கள் ஆணை முடிந்துவிட்டது. அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர். இவ்வாறு அழிக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் நாங்கள் தயார்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை ஸ்திரப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்குப் பங்களிக்கவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசை நியமிப்பதற்கு நாம் தயார்.

இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக யாராவது நாடாளுமன்றத்தில் சதிகளை மேற்கொண்டால் அது தேசத்துரோக செயலாகும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் எமக்கு ஒத்துழைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

Recent News