Thursday, January 23, 2025
HomeLatest Newsநாடகமாடியே நினைத்ததை சாதிக்கும் ராசிக்காரர்கள்..!

நாடகமாடியே நினைத்ததை சாதிக்கும் ராசிக்காரர்கள்..!

சிலருக்கு அவர்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். இன்னும் சிலருக்கு தான் நினைத்தது நடக்கவில்லை என்றால் நாடகமாடியாவது அந்த காரியத்தை சாதித்து விடுவார்கள். அப்படி நாடகமாடியே நினைத்ததை சாதிக்கும் ராசிக்காரர்கள் யார் என இங்கே காணலாம்.

நமது நண்பர்களின் வட்டாரத்தில் சிலர் வியக்கதாகும் வகையில் இருப்பார்கள். சில இக்கட்டான சூழ்நிலையில் தன்னை ஒரு பெரிய பொருளாக உயர்த்தி தனக்கென ஒரு உத்தியை கிரியேட் செய்வார்கள். அவர்கள் வியத்தகு மற்றும் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள். இத்தகையவர்கள், மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். தங்கள் சொந்த தேவைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பார்கள். ஜோதிடம் ஒவ்வொரு பன்னிரண்டு ராசிக்கான குணங்களையும் கணித்துள்ளது. அந்தவகையில், நாடகமாடியே நினைத்ததை சாதிக்கும் ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் காணலாம்.

​கடகம்

இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்க ராசிக்காரர்கள். ஒரு நிகழ்வு அவர்களின் ரசனைக்கு ஏற்றார் போல நடக்காதபோது, அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவதுடன் தனக்கு முக்கியத்துவம் வகையில் ஒரு நாடகத்தை நடத்த ஆரமிக்கிறார்கள். இதன் விளைவு இவர்களின் அழுகையாக கூட இருக்கலாம் அல்லது கோபப்படுவதாக கூட இருக்கலாம். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

சிம்மம்

நாடகம் என்பதற்கு வேறு பெயர் வைக்கலாம் என்றால் அது சிம்ம ராசியாகத் தான் இருக்கும். இவர்கள் வெளிப்படையானவர்கள் மற்றும் மற்றவர்கள் புகழக்கூடிய இடத்தில் இருப்பவர்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையும் செய்வார்கள். அனைவரின் கவனத்தையும் தங்கள் மீது வைத்திருக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிக்க கொஞ்சம் கூட தயங்குவதில்லை. இவர்களின் நாடகம் அநேக நேரங்களில் பலிக்கவும் செய்யும்.

​விருச்சிகம்

அனைத்து விஷயத்திலும் ஆர்வமாக இருப்பவர் விருச்சிக ராசிக்காரர்கள். அடிக்கடி அதிகமாக கோவப்படுபவர்கள். இவர்கள் கோவம் சில சமயங்களில் காரணம் இல்லாமல் கூட இருக்கலாம். இவர்கள் வருத்தமாக இருக்கும் போது, மற்றவர்களை சபிக்கத் தொடங்குவார்கள். இது இவர்களின் வியக்கத்தகு குணங்களில் ஒன்று. மற்றவர்கள் தங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சித்தாலும் அவர்கள் ஆறுதலடைய மாட்டார்கள்.

​கும்பம்

கிசுகிசுக்கள் மீது அதீத ஆர்வம் உள்ளவர்கள். மற்றவர்களுடன் பழகுவது அவர்களுக்கு எளிமையான விஷயமாக இருந்தாலும், இவர்கள் கட்டும் புதிய புதிய கதையால் மற்றவர்கள் இவர்களை விட்டு விலகி செல்ல நினைப்பார்கள். தனக்கு பிடித்தது நடக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் நாடகத்தை மற்றவர்கள் நம்பும் போது மிகவும் உற்சாகமடைகிறார்கள்.

தனுசு

இவர்கள் எந்த வித பந்தாவும் இல்லாத எளிமையான நபர்கள். பொறுமைக்கு பெயர்போனவர்கள். ஆனால், தனக்கு பிடித்த ஒரு விஷயம் நடக்காத போது இதுவரை நீங்கள் பார்க்காத நபரை நீங்கள் பார்க்க நேரிடும். இவர் இப்படிப்பட்டவரா? என நீங்கள் நினைக்க கூடும். அன்பிலும் அரவணைப்பிலும் இவருடன் யாரும் போட்டி போடமுடியாது.

அதேபோல, இவரின் நாடகத்திற்கு முன்னர் யாரும் நிக்க முடியாது?. இவர்களின் நாடகத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். இவர்கள் கோவப்படும் போது இவர்களின் மற்றொரு குணத்தை நீங்க காண நேரிடும்.

Recent News