Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி!

அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட செய்தி!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என   இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு அந்நியச் செலாவனி தட்டுப்பாடு இல்லை.  எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை. 

தற்போது வங்கி முறை மூலம் வழங்கப்படுகின்றது மற்றும் அதன் வைப்புத் தொகை இப்போது சுமார் 600 மில்லியனாக அதிகரித்துள்ளது.  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

Recent News