Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலகிலேயே மிக நீளமான மூக்குடைய மனிதன்! - வைரலாகும் புகைப்படம்

உலகிலேயே மிக நீளமான மூக்குடைய மனிதன்! – வைரலாகும் புகைப்படம்

உலகிலேயே மிக நீளமான மூக்கு கொண்ட மனிதரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நவம்பர் 12ஆம் திகதி Historic Vids என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள புகைப்படம்தான் அது. 

Ripley;s Believe It Or Not என்ற அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தோமஸ் வெடர்ஸ் என்ற நபரின் தலையின் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு அவருடைய கதை சமூக ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

அந்த ட்வீட்டில், தாமஸ் வாட்ஹவுஸ் என்பவர் ஒரு ஆங்கில சர்க்கஸ் கலைஞர். இவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். உலகிலேயே மிக நீளமான மூக்குடைய நபர் என மிகவும் பிரபலமானவர் இவர். 

இவருடைய மூக்கு 7.5 இன்ச்(19 செ.மீ) நீளமுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைகள் (GWR) இணையதளத்தில் இந்த நபரைப் பற்றிய ஒரு பக்கமும் உள்ளது.

அதில் அவர் பயண ஃப்ரீக் சர்க்கஸின் உறுப்பினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ட்வீட்டை 1.20 லட்சம் பயனர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் 7,200க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

1770ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர் தோமஸ் வெடர்ஸ். இவர் பல்வேறு சர்க்கஸ் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவருடைய மூக்கின் நீளம் 19 செ.மீ(7.5 இன்ச்).

தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மிக நீளமான மூக்குடைய நபரின் பெயர் மேஹ்மெட் ஓசௌரெக். இவர் துருக்கியைச் சேர்ந்தவர். 3,46 இன்ச் நீளம் மூக்குடைய இந்த நபரின் பெயர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

Recent News