Thursday, January 23, 2025
HomeLatest Newsகொரோனாவை விட கொடூர வைரஸை உருவாக்கும் முக்கிய நாடு- வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொரோனாவை விட கொடூர வைரஸை உருவாக்கும் முக்கிய நாடு- வெளியான அதிர்ச்சித் தகவல்!

கொரோனாவை விட கொடிய நோய் பரப்பும் வைரஸ் கிருமியை பாகிஸ்தான் துணையோடு சீனா உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட் தொற்று பரவல் ஏற்படுத்திய அச்சம் இன்னும் பலருக்கு நினைவில் இருந்து மறைந்திருக்காது. அதன் தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. 

பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நோய்த் தொற்று பரவல் இது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பேரழிவு நோய்க் கிருமியை சீனா உருவாக்கி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் பீதியை கிளப்பி வருகிறது.

ஊகான் தொற்றுநோயியல் நிறுவனம் பாகிஸ்தானின் ரவல்பிண்டியில் உள்ள ஆய்வகத்தில் அந்த புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவம் DSTO என்ற பெயரில் மிகப்பெரிய மற்றும் மிக நவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. அந்த ஆராய்ச்சி மையத்தில் சீனா தற்போது புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா கிருமியைப் போலவே பரவும் தன்மை கொண்ட இந்த புதிய வகை வைரஸ் கொரோனாவை விட போராபத்தை விளைவிக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

Recent News