உலகளவில் சுமார் இரண்டு வருடமாக நீடித்த கொரோனா பெருந்தொற்றால் பல இலட்சக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் தற்சமயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
இந் நிலையில் அமெக்காவில் புதிய வகை பக்றீரியாவின் தாக்கத்தால் அந் நாட்டின் வளைகுடா கடற்கரைப் பகுதியில் வசித்து வந்த மூவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட.பரிசோதனையின் படி பல்கோல்டெரியா சூடோமல்லெய் என்ற பக்றீரயாவின் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மிக ஆபத்தான பக்றீரியாவாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இவற்றின் தாக்கம் நீரிழிவு நோயாளிகள் , சிறுநீரகம் மற்றும் கல்லீரல்பாதிப்பிற்குட்ட்டோர் உள்ளிட்ட மதுபானம் அருந்துவோருக்கே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
இதன் தாக்கத்தால் 50 சதவீதத்திற்கு அதிகமான உயிரிழப்புக்கு வாய்ப்புள்ளதுடன், குறித்த பக்றீரியா இயற்கையாகவே மண் மற்றும் புதிய நீரில் காணப்படக்கூடியது.
குறிப்பாக வெப்ப மண்டலம் , துணை வெப்ப மண்டலங்களில் காணப்படுமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.