Friday, March 29, 2024
HomeLatest Newsசுற்றுலாவந்த ஜேர்மன் பிரஜைக்கு நாய் தடுப்பூசி ஏற்றிய மருத்துவமனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

சுற்றுலாவந்த ஜேர்மன் பிரஜைக்கு நாய் தடுப்பூசி ஏற்றிய மருத்துவமனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

இலங்கையில் நாய் கடித்த ஜெர்மனிபிரஜை ஒருவருக்கு நாய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வாரம் ஜெர்மனிபிரஜைகள் குழுவொன்று கதிர்காமம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது, ​​வெளிநாட்டவர் ஒருவரை வீதியில் நாய் கடித்துள்ளது.

நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி
இதனையடுத்து சுற்றுலா வழிகாட்டியுடன் திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு வெளிநாட்டவர்கள் சென்றுள்ளனர். நாய் கடித்த ஜெர்மனி நாட்டவருக்கு சிகிச்சை நிலையத்தில் இருந்து நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தவறான தடுப்பூசி போட்டதை அறிந்த வெளிநாட்டவர் மீண்டும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சென்று நாய்கள் கடித்த பின்னர் பெறப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், மாத்தறை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த மருத்துவ சிகிச்சை நிலையம் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News