செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டர் 63 நாட்களின் பின்னர் மீண்டும் தொடர்பிற்கு வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதனை கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து செய்து வருகின்றது.
அதற்காக நாசா விண்கலன்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்னவுள்ளது என்பது பற்றி புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வரும் நிலையில், அவ்வாறான புகைப்படங்களை நாசா இடையிடையே வெளியிட்டும் வருகின்றது.
அந்த அடிப்படையில், நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரையம் அனுப்பியுள்ளது.
அது, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டமையால் அதற்கான காரணம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இவ்வாறான சூழலில், 63 நாட்களிற்கு பின்னர் குறித்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் இறங்கிய மேற்பரப்பில் ஒரு பெரிய மலை இருந்தமையே தொடர்பு தடைபட்டத்திற்கு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, இது குறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன், இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாமல் போய்யுள்ள நிலையில் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆயினும், அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.