இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கு அரசாங்கத்தின் வரி வருமானம் 18 வீதமாக பேணப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
பணத்தை அச்சிடாமல் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது எனவே வரி மூலம் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரிக் கொள்கை திருத்தம் காரணமாக 2019ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 8.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை 14 சதவீதமாக உயர்த்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.