Sunday, May 5, 2024
HomeLatest Newsவட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை!

வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை!

வட கொரியா கிழக்கு நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளதாக, தென் கொரியாவின் கூட்டுப் பணியாளர்கள் மற்றும் ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா பிராந்தியத்திற்கு ஒரு விமானம் தாங்கி கப்பலை மீண்டும் நிலைநிறுத்திய பின்னர் மற்றும் தென் கொரியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்பட்ட ஆறாவது ஏவுகணையை வட கொரியா இன்று (வியாழக்கிழமை) சோதனை செய்துள்ளது.

முதல் ஏவுகணை வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிற்கு அருகிலுள்ள ஒரு தளத்தில் இருந்து காலை 6.01 மணிக்கு ஏவப்பட்டது. இரண்டாவது ஏவுகணை 22 நிமிடங்களுக்கு பிறகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கையை முற்றிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா கண்டித்துள்ளார்.

Recent News