Monday, December 23, 2024
HomeLatest Newsகமலை கிண்டலடித்த பெண் போட்டியாளர்!-எமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

கமலை கிண்டலடித்த பெண் போட்டியாளர்!-எமினேஷனில் ஏற்பட்ட மாற்றம்

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமானது.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.

மேலும் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி என தொடர்ந்து பலர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அந்த ப்ரோமோவிலேயே வெளியேறப் போவது இவர் தான் எனப் புரிந்து விடுகின்றது. அதாவது அதில் “நாமினேட் ஆனவங்க யார் யார்” எனக் கமல் கேட்கின்றார். அதற்கு உடனே ராபர்ட் மாஸ்டர், மணிவண்ணன், ராம் ஆகியோர் கையைத் தூங்குகின்றனர்.

அடுத்த கேள்வியாக இதில் யார் காப்பாற்றப்படுவார்கள் எனக் கேட்கின்றார். அதற்கு போட்டியாளர்கள் அனைவருமே ராம் மற்றும் மணிகண்டனைக் கூறுகின்றனர். அதற்கு கமல் “எல்லா நேரத்திலும் ஜோக்கும், விளையாட்டுமாக இருந்திடக்கூடாது என்பதற்கு இதை விடப் பெரிய உதாரணம் இருக்க முடியாது” எனக் கூறுகின்றார்.

மேலும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றார் கமல். மேலும் கடந்த வாரம் முழுவதும் ராம் தான் வெளியேறுவார் எனப் பலரும் கூறி வந்த நிலையில் இன்றைய தினம் ராம் வெளியேற மாட்டார் போல் தெரிகிறது. அதுமட்டுமல்லாது ரசிகர்கள் கூறுவது போல் ராபர்ட் மாஸ்டர் தான் வெளியேறினாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ…!

Recent News