Sunday, May 5, 2024
HomeLatest Newsபிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு இடம்பெறும் திகதி அறிவிப்பு

பிரித்தானிய மகாராணியின் இறுதிச்சடங்கு இடம்பெறும் திகதி அறிவிப்பு

மறைந்த பிரித்தானிய ராணி எலிசபெத்தின் நல்லடக்க ஏற்பாடுகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை ராணி எலிசபெத்தின் இறப்பை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இறுதிச் சடங்கு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இளவரசர் பிலிப் நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் நீண்ட கால முடியாட்சியை நடத்தி வந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமாகியிருந்தார்.

இந்நிலையில், ராணியார் மறைந்ததன் 10வது நாள், அரசு முறைப்படி இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற உள்ளது.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு 10 நாட்கள் அனுசரிக்கப்பட்டு, அவரின் உடல் செப்டம்பர் 19ம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையைக் கடந்து, வின்ட்சர் கேஸ்டலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்னர், கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News