Thursday, March 28, 2024
HomeLatest Newsவிண்வெளியில் முதல் பயணம் செய்த அமெரிக்க வீரர் மறைவு! கண்கலங்க வைக்கும் பதிவு

விண்வெளியில் முதல் பயணம் செய்த அமெரிக்க வீரர் மறைவு! கண்கலங்க வைக்கும் பதிவு

விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமனானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சாதனையாக நிலவிற்கு மனிதன் சென்று திரும்பி வந்தது தான் பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திட்டம் சாதித்துக் காட்டியது.

பல முறை மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை தோல்வியுள்ள நிலையில் கடுமையான ஆராய்ச்சிகளுக்கு பின்னர் 1968-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் திகதி முதல் முறையாக ‘அப்பல்லோ 7’ என்ற விண்கலத்தில் அனுப்பியது.

இந்த விண்கலம் தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றியை அள்ளிக் கொடுத்தது. இதன்படி அப்பல்லோ விண்கலத்தில் டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா மற்றும் வால்டர் கன்னிங்ஹாம் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் சுமார் 11 நாட்கள் பயணம் மேற்கொண்டார்கள்.

இந்த காட்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பட்டதுடன் இவர்கள் அதே மாதத்தில் 22 ஆம் பூமிக்கு வந்தடைந்தார்கள்.

இந்நிலையில் இந்த விண்கலத்தில் இருந்த வீரர்களில் டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஆரம்பத்திலே இறந்து விட்ட நிலையில் தற்போது வால்டர் கன்னிங்ஹாம் உடல் நிலை சரியில்லாமல் இருந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு தற்போது 90 வது வயது, அமெரிக்கக் கடற்படையிலும் சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றியுள்ளார்.

மேலும் ஓய்வு பெறுவதற்கு முன் போர் விமானியாக சுமார் 54 பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னர் தான் கடந்த 1963-ம் ஆண்டு தான் இவர் நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Recent News