ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங், யூனியன் பிரதேசத்தின் இளைஞர்களுக்கு போதைப் பழக்கத்தை அறிமுகப்படுத்த பாகிஸ்தான் சதி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது பஞ்சாபில் செய்யப்பட்டதைப் போன்ற ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அண்மைக்காலமாக போதைப்பொருள்-பயங்கரவாத வர்த்தகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து விலகி இருக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அதே வேளையில் இந்த சதியை எச்சரிக்கையாக இருந்து தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தை சிங் வலியுறுத்தினார்.
காஷ்மீரில் வெளிநாட்டு தீவிரவாதிகளின் இருப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.