அடுத்த ஆண்டில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரசாயன உரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு மீண்டும் தேயிலை உற்பத்திக்கு தேவையான உரம் கிடைப்பெறுவதால் அடுத்த ஆண்டில் சிறந்த பெறுபேரை பெற முடியும் என தரகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 260 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இரசாயன உரம் மீதான தடையினால் தேயிலை தொழிற்துறை பாரிய சவாலை சந்தித்து இருந்தது.
எவ்வாறாயினும், தேயிலை உற்பத்தியின் ஊடாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தரகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிற செய்திகள்