Monday, April 29, 2024
HomeLatest Newsபூமிக்கு அடியில் வினோத கிராமம்! மக்கள் ஆடம்பர வாழ்க்கை

பூமிக்கு அடியில் வினோத கிராமம்! மக்கள் ஆடம்பர வாழ்க்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கிராமம் ஒன்று உள்ளதுடன், இங்கு அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் சுவாரிசயமாகக் காணப்படுகின்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது தான் உலகின் தனி சிறப்பாகும்.

இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தும் இங்கு காணப்படுகின்றது.

மேலும் இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.

பாலைவனமாக இருந்த பகுதி
ஒரு காலத்தில் இந்த கிராமம் பாலைவனமாக இருந்ததாகவும், இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்ட்டுள்ளனர்.

பின்பு 1915ம் ஆண்டு சுறங்கப்பணி ஆரம்பிக்கப்பட்ட இந்த கிராமத்தில் பின்பு மக்கள் அதில் தங்க ஆரம்பித்துள்ளனர்.

பிற செய்திகள்

Recent News