தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தென்னாப்பிரிக்காவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடனான சந்திப்பின் போது தனது சீன மற்றும் ரஷ்ய சகாக்களுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு தற்போதைய உக்ரைன் மோதல், இந்தோ-பசிபிக் முன்னேற்றங்கள், மத தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதற்கு மேலதிகமாக இந்த கூட்டத்தில் லடாக்கில் நிலவிவரும் இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து நிலவி வரும் பதட்டங்களினை பற்றி இருதரப்பு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அஜித் தோவல் சீன தூதருடன் லடாக் எல்லை பிரச்சினையை நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.