குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பாலம் அறுந்து விழுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் இதவரையில் சுமார் 141 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
சம்பவத்தின் போது 400 பேர் கட்டடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் குறித்த தொங்கு பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் அறுந்து விழுந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்