Tuesday, December 24, 2024
HomeLatest News11 வயதிலும் டயப்பர் அணியும் மாணவர்கள்...!கலக்கத்தில் ஆசிரியர்கள்...!

11 வயதிலும் டயப்பர் அணியும் மாணவர்கள்…!கலக்கத்தில் ஆசிரியர்கள்…!

வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது டயப்பர் அணிவது அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் 11 வயதாகும் மாணவர்கள் பள்ளிக்கு டயப்பர் அணிந்து வருவதாக வெளியான தகவலால் அங்குள்ள ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்த தகவல்களை சுவிஷ் ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ரோஸ்லட் என்பவரே தெரிவித்துள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக இவ்வளவு மாணவர்கள் டயப்பர் அணிவதாக கூறமுடியாது எனவும் ரோஸ்லட் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாணவர்களின் இந்த செயற்பாட்டிற்கு பின்னால் தீவிர மனநிலை பாதிப்பும், மோசமான குடும்ப சூழ்நிலையும் நிலவும் சாத்திய கூறுகள் அதிகளவில் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

அதனால், பெற்றோர்களுடன் மாணவர்களுக்கும் மனநிலை ஆலோசனை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்த இளமையில் அவ்வாறு டயப்பர் அணிந்து வரும் மாணவர்களை அவமானப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Recent News