அமெரிக்காவில் பிரபல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் இலங்கை பூர்வீகம் கொண்ட மாணவி, அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலராக, இலங்கையின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்களில் ஈடுபட்டு வரும் காவிந்த்யா தென்னகோன் என்ற மாணவியே இவ்வாறு தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.
கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இலங்கை இளைஞர்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார்
தனக்கு பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்ட தொப்பில் ஆர்ப்பாட்டங்கள் பல வகுப்பறையில் இருந்தே ஆரம்பிக்கின்றன. இலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சியில் காவிந்த்யா தனது சாதனைகளுக்காக மகாராணியிடமிருந்து விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.