Sunday, May 19, 2024
HomeLatest Newsஇலங்கையின் பணவீக்கம் 21.5% ஆக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் 21.5% ஆக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் 21.5% ஆக அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 21.5% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) இன் கீழ் இலங்கையின் நுகர்வோர் விலைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் சாதனையான இரட்டை இலக்கமான 21.5 சதவீதத்தை எட்டியது.

2015 ஜனவரி மாதத்திற்குப் பின்னர், இலங்கையில் பணவீக்கம் அதிகூடிய சதவீதத்தை எட்டியுள்ளது.

பணவீக்கம் உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் மாதாந்த விலை உயர்வுகளால் உந்தப்பட்டது.

அதன்படி, உணவு வகைக்குள், அரிசி, தேங்காய் எண்ணெய், பருப்பு, பால் பவுடர், முட்டை, புதிய மீன், ரொட்டி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது.

Recent News