Monday, December 23, 2024
HomeLatest Newsகனடாவுக்கு செல்லநினைத்து வியட்நாமில் மாட்டிக்கொண்ட இலங்கையர்கள் எடுத்த முடிவு!

கனடாவுக்கு செல்லநினைத்து வியட்நாமில் மாட்டிக்கொண்ட இலங்கையர்கள் எடுத்த முடிவு!

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றிகளையும் கூறியுள்ளார்.

Recent News