Thursday, May 16, 2024
HomeLatest Newsமுகப்புத்தக நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 6000 கோடி அபராதம்

முகப்புத்தக நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 6000 கோடி அபராதம்

உலகம் முழுவதும் முகப்புத்தக செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக முகப்புத்தக நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க முகப்புத்தக பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் குறித்த வழக்கில், முகப்புத்தக நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.

அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும் பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்றும் முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Recent News