இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து கடந்த மே மதம் 6 ஆம் திகதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இளவரசர் சார்ள்ஸ் மன்னராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த முடி சுட்டு விழாவை குறிக்கும் வகையில் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அதனை அதிகாரப்பூர்வமாக தயாரித்த ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
உடனடியாக புழக்கத்தில் வந்துள்ள இந்த நாணயத்தை நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் வாங்கி கிளைகளில் பெற்று கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது மன்னரின் உருவம் பொறித்து புழக்கத்திற்கு வந்த இரண்டாவது நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது