Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் - அதிரடியில் எலான் மஸ்க்..!

22 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் – அதிரடியில் எலான் மஸ்க்..!

அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங் என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இதற்காக தொடர்ச்சியாக ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரையில் 4,500-க்கும் அதிகமான ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 22 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று விண்ணில் செலுத்தியது. அவை புவி வட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

Recent News