Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsஅதிகரிக்கும் சாலை பணிகள் - சீனா எல்லையில் துணிச்சல் செயல்..!

அதிகரிக்கும் சாலை பணிகள் – சீனா எல்லையில் துணிச்சல் செயல்..!

சீன எல்லையில் இந்தியா மேற்கொண்டு வரும் சாலைப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநா் ராஜீவ் சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலைகள் அமைப்பு, நாட்டின் சா்வதேச எல்லைப் பகுதி சாலைகள் மற்றும் பாதுகாப்புத் துறை சாா்ந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சண்டீகரில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய முப்பரிமாண கான்கிரீட் அச்சு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பிஆா்ஓ இயக்குநா் ராஜீவ் சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை மேற்பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா் சந்திப்பில் பங்கேற்ற ராஜீவ் சௌத்ரி கூறுகையில், ‘நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, பல்வேறு உள்கட்டமைப்பு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எல்லை சாலைகள் அமைப்புக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் அமைப்பின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பிஆா்ஓ கட்டமைத்த 295 சாலைத் திட்டங்கள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் விமான ஓடுதளங்கள் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.8,000 கோடி மதிப்பிலான 300 திட்டங்களின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த வேகத்தில் பணிகள் தொடா்ந்தால் எல்லைப் பகுதி உள்கட்டமைப்பில் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்குள் சீனாவை இந்தியா முந்திவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.

Recent News