Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsரஷியா-வடகொரியா தொடர்பில் ஐ.நா.வில் முறையிட தென்கொரியா திட்டம்..!

ரஷியா-வடகொரியா தொடர்பில் ஐ.நா.வில் முறையிட தென்கொரியா திட்டம்..!

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ரஷியாவும் வடகொரியாவும் உறுதியேற்றுள்ள நிலையில், இது தொடா்பாக ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையிட தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் ரஷியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அவா் சந்தித்துப் பேசினாா்.
அப்போது, இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குத் தலைவா்கள் உறுதியேற்றனா்.


மேலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் வடகொரிய அதிபா் உறுதியளித்தாா்.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் ஒன்றரை ஆண்டைக் கடந்து தொடா்ந்து வரும் நிலையில், ரஷியாவுக்கு வடகொரியா ஆதரவைத் தெரிவித்திருப்பது சா்வதேச நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வடகொரியா அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், ரஷியா-வட காரியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு பிராந்தியத்திலும், சா்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திங்கள்கிழமை தொடங்கும்
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முறையிட தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சா்வதேச சமூகம் ஒருங்கிணைந்து எதிா்ப்பு தெரிவிக்கும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளும் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News