பொதுவாகவே கோடைக்காலம் என்றால் அனைவரும் தேடுவது ஐஸ் பானம், ஐஸ் கட்டிதான். தொடர்ந்து ஐஸ்கட்டிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்கும்.
குளுகுளுவென்றும், புத்துணர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும் ஐஸ்கட்டிகளின் பலவித நன்மைகளை பற்றி நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தவகையில் ஐஸ் கட்டியில் இருக்கும் நற்பயன்களைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.
ஐஸ் கட்டியின் நன்மைகள் துணிகள் சுருக்கமாக இருந்தால் அதனை ட்ரையரில் போடும்போது அதனுடன் சிறிது ஐஸ்கட்டிகளை சேர்த்து போட்டால் துணிகளில் சுருக்கமின்றி இருக்கும்.
அலைச்சல், தூக்கமின்மை, தூசி, மாசுக்கள் போன்றவற்றால் நம்முடைய முகம் மிக வேகமாகவே பொலிவை இழந்து விடுகிறது. வியர்வையினால் நம் முகம் வாடிவிடும் இதற்கு ஐஸ் கட்டி சிறந்தது.
உங்கள் உடையிலோ, தலைமுடியிலோ, செருப்பிலோ அல்லது உடம்பிலோ ஏதேனும் பொருள் ஒட்டிக்கொண்டால் அந்த இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து தேய்த்தால் எளிதில் அவற்றை போக்கிவிடலாம்.
ஏதேனும் காயம் அல்லது ரத்தக்கட்டு ஏற்பட்டால் அந்த இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பதால் காயத்தை சரிசெய்யலாம்.
கர்ப்பிணி பெண்கள் ஐஸ்கட்டிகளுக்கு பதிலாக ஐஸ் சிப்ஸ்களை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் காலை நேர சோம்பல், குமட்டல், அதிக சூடு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம்.
ஐஸ்கட்டிகள் உடல் வலியை நீக்கும். முட்டி வலி, முதுகு வலி என உடலில் எந்த இடத்தில் வலியிருந்தாலும் பறந்து போகும்.
முகத்தில் அரிப்பு அல்லது அலர்ஜி உண்டானால் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும், அலர்ஜி பரவாமல் தடுக்கும்