சீனா தனது இராணுவ முன்னெடுப்பபுக்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் நேற்றைய தினம் எந்த முன்னறிவித்தல்களும் இன்றி சீனா தாய்வான் வான் பரப்பில் மேற்கொண்டிருந்த போர்ப் பயிற்சிகள் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ‘தைபே’ நாட்டிற்கான தனது இரண்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து தைபேக்கு செல்லும் ‘SQ878’ என்ற விமானமும், தைபேயில் இருந்து சிங்கப்பூரிற்கு வரும் ‘SQ879’ என்ற விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் குறிப்பிட்டளவு நாள் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விசனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி கருத்து தெரிவிக்கும் போது, “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியம். இதன் காரணமாக மேற்படி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனா இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். மேற்படி சீனாவின் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் நாம் எமது விமான சேவைகளில் நேர மாற்றங்களை கொண்டு வர வேண்டிய சூழல் உருவாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.