Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsஇந்திய சீனா பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் - வெளியான அறிவிப்பு..!

இந்திய சீனா பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – வெளியான அறிவிப்பு..!

இந்திய இராணுவம் மற்றும் சீன மக்கள் விடுதலை இராணுவம் இடையே 19 வது சுற்று விவாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் , கிழக்கு லடாக்கில் மீதமுள்ள பதட்டமான பகுதிகளில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறுவது மற்றும் பதட்டங்களை குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது .

இது தொடர்பான உயர் மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகள் பல மணி நேரம் நீடித்தன. பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய பிராந்தியங்களில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


முந்தைய இராஜதந்திர மற்றும் இராணுவ விவாதங்கள் இருந்தபோதிலும், கிழக்கு லடாக்கில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய புள்ளிகளில் இரு தரப்பிலிருந்தும் துருப்புக்கள் இன்னும் நிலைகொண்டுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகிறது.


இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த விவாதங்கள் பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News