Thursday, November 14, 2024
HomeLatest NewsWhatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் இரகசியமாக மறைப்பது எப்படி தெரியுமா?

Whatsapp ஆன்லைன் காட்ட கூடாதா? யாருக்கும் தெரியாமல் இரகசியமாக மறைப்பது எப்படி தெரியுமா?

இன்று பலரும் பயன்படுத்தும் சமூகவலைத்தளமாக வாட்ஸ்அப் (Whatsapp) உள்ளது.

வாட்ஸ்அப்பில் நாம் ஒன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைக்க முடியும்.பொதுவாக வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடை chat பக்கத்தில் ஆன்லைன் என காண்பிக்கும்.

அதன் மூலம் நாம் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது பிறருக்கு தெரியும். இதனை தடுத்து வைக்க முடியும்.

பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வைத்திருக்கின்றது.

இனி இதனை எவ்வாறு நிறுத்தி வைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

*ஆன்லைன் ஸ்டேட்டஸை எப்படி நிறுத்தி வைக்கலாம்
*முதலில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும்.
*அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும்.
*வாட்ஸ்அப் Setting Menu செல்லவும்.
*அதில் Account Setting என்பதை கிளிக் செய்யவும்
*அதனை கீழ்பக்கமாக ஸ்க்ரால் செய்தால் Privacy option காண்பிக்கப்படும்.
அதனை செலக்ட் செய்யவும்.
*அதில் Last seen and online என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
*அடுத்ததாக who can see when I’m online என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
*அதில் Everyone மற்றும் same as last seen என இரண்டு விதமான ஆப்ஷன்கள் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யலாம்.
*அடுத்ததாக Contacts என்பதை கிளிக் செய்தால் தொடர்பில் உள்ளவர்கள் மட்டுமே நீங்கள் ஒன்லைனில் இருப்பதை காண முடியும். அதே சமயம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடர்புகளை மட்டும் முடக்க My contacts except என்ற ஆப்ஷனையும், அனைவரையும் முடக்க No body என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்ய வேண்டும்.

whatsapp சமூகவலைதளமானது பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை whatsapp அறிமுகப்படுத்தி வருகிறது.

வசதிகள் அறிமுகப்படுத்தும் போது, பயனர்களின் தனியுரிமை காப்பதிலும் whatsapp முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

பிற செய்திகள்

Recent News