Thursday, January 23, 2025

உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்போ இந்த காணொளியை பாருங்க

குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த காய் கறிகள் மற்றும் பழங்களை உற்கொள்வது மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த காய் கறிகள் உற்கொள்வதால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும் அதுமட்டும் இன்றி குடல் மற்றும் பிற உடல் பாகங்கள் சீராக செயற்பட உற்புற உடல் வெப்பநிலையை உடல் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கோடை காலத்தில் குடல் தொடர்பான வயிற்றுப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம் இதனால் இந்த காலத்தில் உடலை பாதுகாப்பது மிக மிக அவசியம் இதனால் ஆப்பிள் சைடர் வாயு மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. இது செரிமான செயல்முறையை அதிகரிக்கிறது. வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் இதில் உள்ளன. கோடைக்காலத்தில் தினமும் தர்பூசணியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா? கிராம்பு கோடை காலத்தில், வெப்பம் காரணமாக செரிமான செயல்முறை குறைகிறது. எனவே, கிராம்பு உட்கொள்வது செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரோக்கியமானதுனு நீங்க தினமும் சாப்பிடுற இந்த உணவுகள் மாரடைப்பை கூட ஏற்படுத்துமாம் தெரியுமா? எலுமிச்சை சாறு எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

இது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பலன்களை வழங்குகிறது. ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக, வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் குடல் அழற்சியைக் குறைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

எலுமிச்சை சாறு மலச்சிக்கல் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இலவங்கப்பட்டை ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட ஆர்எம்ஐடி பல்கலைக்கழக பொறியியல் பள்ளியின் ஆய்வின்படி, இலவங்கப்பட்டை ஒரு சிறிய டோஸ் கூட வயிற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

இலவங்கப்பட்டை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் ப்ரீபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கிறது.

எனவே, உங்கள் உணவில் இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இஞ்சி சிறந்த சுவை மட்டுமல்ல, இந்த மசாலா உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். செரிமானத்தைப் பொறுத்தவரை, இது உங்கள் குடல் உணவை குடல் வழியாக நகர்த்த உதவுகிறது. எனவே, இஞ்சி உங்களுக்கு வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தாது. இஞ்சி வயிற்றைக் காலியாக்குவதை விரைவுபடுத்துகிறது, இது அஜீரணம் மற்றும் தொடர்புடைய வயிற்றில் உள்ள அசௌகரியம் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.

இதனை பற்று மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos