யுக்ரேன் மீது ரஷ்ய படைகள் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை ஒரு மாதங்களை தாண்டியும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இதேவேளை ரஷ்ய படைகள் யுக்ரேனின் பல்வேறு இடங்களையும் கைப்பற்றி தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்ததுடன் யுக்ரேனின் தலைநகரான கீயவை கைப்பற்றும் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக இராணுவ நடவடிக்கையை முழுவீச்சில் முன்னெடுத்துவருகின்றனர்.
குறித்த இராணுவ நடவடிக்கையில் தொடர்ந்தும் இரு தரப்பிலும் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய படைகள் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டதுடன் இதனால் பொதுமக்களும் உயிரிழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் யுக்ரேன் ராணுவ உளவுத் துறையின் தலைவர் கைரைலோ புடனோவ் ரஷ்ய படைகளின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் யுக்ரேன் முழுவவதையும் கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் யுக்ரேனை இரண்டாக உடைத்து ஒன்றை ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ரஷ்ய படைகள் முயற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய படையெடுப்பு பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ள நிலையில் யுக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மட்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கவனம் செலுத்துவதாகவும் குறித்த இரண்டு பகுதிகளையும் ரஷ்யாவால் இணைக்க முடியுமானால் கொரிய போருக்குப் பிறகு நிகழ்ந்ததைப் போல இந்தப் பகுதியையும் யுக்ரேனின் பிற பகுதிகளையும் பிரிக்கும் ஒரு கோட்டினை உருவாக்க புதின் முயல்வார் என்று யுக்ரேன் ராணுவ உளவுத் துறையின் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.