Thursday, March 28, 2024

மேற்கு நாடுகளுடனான இணைய பாதுகாப்பு திட்டத்தில் இணைகின்றது இந்தியா.

அண்மைய நாட்களாக இந்தியாவின் தொழிநுட்பம் எதிர்பார்த்ததை விட அதி விரைவான வளர்ச்சியை கண்டு வருவதானது எல்லோரையும் பெருமிதம் செய்ய வைக்கின்றது என இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அடிப்படை காரணம் இந்திய தன்னுடைய சொந்த மனித வளங்களை தன்னுடைய நாட்டிலேயே பயன்படுத்துவது தான். ஏனெனில் இன்று ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளில் தொழிநுட்பம் மற்றும் நவீன இணைய வளர்ச்சியில் கொடிகட்டி பறப்பவர்கள் இந்தியர்களாக இருப்பது இந்தியா தனது மக்களின் அறிவாற்றலை தன்னுடைய அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தாமலிருப்பதன் நிலையை உணர்ந்து தற்போது அவர்களை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் குறுகிய காலப் பகுதியில் அதிக விளைச்சலை இந்திய இராணுவம் பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது பசுபிக் பிராந்தி கூட்டணியின் இணைய பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்ளுமாறு இந்தியாவிற்கு அழைப்பு கிடைத்திருக்கின்றது. இந்த அழைப்பிதழ் குறித்த உறுதிப்பாட்டை செய்தி ஊடகங்களுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு பேச்சாளர் Emily Horne தெரிவித்துள்ளார்.

Latest Videos