Sunday, May 19, 2024
HomeLatest Newsமருந்து பொருட்கள் கடும் பற்றாக்குறை – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மருந்து பொருட்கள் கடும் பற்றாக்குறை – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் உள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை நன்கொடையாகப் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் திகதி அறிக்கையை வெளியிட்ட வெளியுறவு அமைச்சகம், இலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மருத்துவத் தேவைகளின் பட்டியலை முன்வைத்துள்ளது.

அமைச்சகம் பகிர்ந்துள்ள பட்டியலில் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள், புற்றுநோயியல் பொருட்கள் மற்றும் 3 மாதங்களுக்கு மகளிருக்கு தேவையான மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்கள் ஆகியவை அடங்கும்.

தற்போதைய அந்நியச் செலாவணி சவால்கள் காரணமாக, சில மருத்துவத் தேவைகளின் விநியோகச் சங்கிலியைப் பராமரிப்பது கடினம் என்றும், எனவே மருத்துவத் தேவைகளை நன்கொடையாகப் பெறுவதற்கு உதவுமாறு சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.

மருத்துவத் தேவைகள் குறித்த கூடுதல் தகவல்களை, சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானியை தொலைபேசி: 009411 771214131 தொலைநகல்: 009411 2669491 மின்னஞ்சல்: moh.covid.coordinator@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News