Wednesday, May 1, 2024
HomeLatest Newsதொழில்நுட்ப கோளாற்றின் காரணமாக சிக்கலில் ரஷ்யாவின் லூனா - 25 விண்கலம்…..!

தொழில்நுட்ப கோளாற்றின் காரணமாக சிக்கலில் ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம்…..!

இந்தியாவின் சந்திராயன் – 3 விண்கலத்திற்கு முன்னர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் தரையிறங்கும் இறுதி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

தரையிறங்க எதிர்பார்த்திருந்த நிலையில் தானியங்கு நிலையத்தின் அசாதாரண சூழல் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இக் கோளாறு தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இந்தியா விண்வெளி மையம் சார்பில் ஆந்திரா மாநிலத்தில் ஹீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் – 3 ராக்கட்டின் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜீலை 14 ம் திகதிவிண்ணில் ஏவப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

கடந்த 47 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா சார்பில் முதல் முறையாக குறித்த விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். லூனா 25 விண்கலம் எதிர்வரும் 16 ம் திகதி நிலவின் சுற்றுப்பாதையில் களமிறங்கவுள்ளது. அதன் பின் நிலவின் சுற்றுப்பாதையை வலம் வந்து எதிர்வரும் 23 ம் திகதி நிலவின் தென்துருவத்தில் இந்தியாவின் சந்திரயானுக்கு முன்னதாகவே தரையிறங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Recent News