ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான நான்காம் கட்ட பேச்சு வார்த்தைகள் மீண்டும் துருக்கி நாட்டின் Istanbul நகரில் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் இரு நாடுகளும் தம்மை பேச்சு வார்த்தைக்காக தயார்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சுற்று பேச்சு வார்த்தையில் இரண்டு நாட்டுத் தலைவர்களையும் நேருக்கு நேர் அமர்த்தி பேச்சு வார்த்தையை மேற்கொள்ளும் திட்டமும் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை உக்ரைன் ரஷ்யாவை நடுநிலையாக வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தை குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் Zelenskyy இந்த சுற்றில் நாம் மிக கவனமாகவும் அவதானமாகவும் இருக்கின்றோம். புரிந்துணர்வு மற்றும் விட்டுக் கொடுப்பு போன்றவற்றிற்காக எம்மை ஆயத்தப்படுத்துகின்றோம். எப்படியாவது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதே எமது நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.